கால அவகாசம் இல்லாததால், கட்சி நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்து போட்டி!

கால அவகாசம் இல்லாததால், கட்சி நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்து போட்டி!

கால அவகாசம் இல்லாததால், கட்சி நிர்வாகிகளின் விருப்பப்படி தனித்து போட்டியிடுவதாக  பாமக தலைவர் ஜி.கே.மணிதெரிவித்துள்ளார். 

வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடப்போவதாக பாமக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இது குறித்து பாமக மற்றும் அதிமுக இடையில் பெரும் கருத்து மோதல் நிலவியது. 

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி கூறும் போது, தனித்து போட்டியிடும் முடிவு குறித்து அதிமுக உடன் ஆலோசிக்கவில்லை.அதற்கு அவசியம் இல்லை.முடிவு எடுத்த பின்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர்களிடம் தகவல் தெரிவித்தோம்  என்றும் அதிமுக தலைமை குறித்தோ, எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறித்தோ ராமதாஸ் தவறாக எந்த கருத்தும்  கூறவில்லை.எடப்பாடி பழனிசாமி மீது ராமதாஸ் நல்ல மரியாதை வைத்துள்ளார்  என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக தொடர்கிறது.ஜி.கே.மணி ஜெயித்ததே அதிமுக ஓட்டால் தான். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெயித்ததும் பாமக ஓட்டால் தான் என தெரிவித்துள்ளார்.

 

Find Us Hereஇங்கே தேடவும்