மானியக்கோரிக்கை திட்டங்கள் - நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மானியக்கோரிக்கை திட்டங்கள் - நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேறகொள்ளவுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 13ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.அதையடுத்து 14ம் தேதி தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 23ம் தேதி முதல் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.அதோடு அமைச்சர்கள் அனைவரும் அவர்களுடைய துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தனர்.இந்நிலையில் நாளை அனைத்து துறை சார்ந்த செயலாளர்களுடன் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்