அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் - அமைச்சர் செந்தில் பாலாஜி!

அடுத்த 6 மாதங்களில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைப்பெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

மின் இணைப்புக்கு 4.52 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.2022 மார்ச் மாதத்துக்குள் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பதிவு செய்தவர்களுக்கு மின்சார வாரியம் விரைவில் கடிதம் அனுப்பும் என்றும்  கடிதம் கிடைத்த 30 நாட்களுக்குள் பதிவு செய்தவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 16,000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது.40% மின்சாரம் தனியாரிடம் இருந்து அரசு கொள்முதல் செய்கிறது என்றும்    தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்