அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் - மாநில தேர்தல் ஆணையம் !

தமிழகத்தில் அக்டோபர்  6 மற்றும் 9ம் தேதிகளில்  விடுபட்ட 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது.

 ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும். அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை ,வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார்   அறிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகள் பின்பற்றி தேர்தல் நடத்தப்படும்.தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.வெப் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க இருப்பதாகவும், தெரிவித்துள்ளார்.செப்டம்பர் 22ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்றும்  23 வேட்புமனு ஆய்வு செய்யப்படும். 25ம் தேதி  வேட்புமனு வாபஸ் செய்ய கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்