ஜனநாயக மரபை மீறி கடந்த ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

ஜனநாயக மரபை மீறி கடந்த ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

ஜனநாயக மரபை மீறி கடந்த ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று சுமார் 20 மசோதக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டது.

அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் பற்றி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திதார்.அப்போது பேசிய அவர், நிதி ஆதாரம் இல்லாமல் அதிமுக ஆட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆன்லைனில் பதிவேற்றப்பட்டுள்ளது.ஜனநாயக மரபை மீறி கடந்த ஆட்சிகாலங்களில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  அதிமுக ஆட்சியில் திட்டங்களை அறிவித்த பின் ஆய்வு செய்து பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்