குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!..

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா!..

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த விஜய் ரூபானி, புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை என ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்து வந்த நிலையில், அடுத்தாண்டு பொதுத்தேர்தல் வரவிருக்கும் சமயத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்

இதே போல், கர்நாடக முதல்வராக இருந்துவந்த 78 வயது நிரம்பிய எடியூரப்பா வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்