கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சிசிடிவி செயல்படாதது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த போது சிசிடிவி செயல்படாதது ஏன்? அப்போது அதிமுக தானே ஆட்சியில் இருந்தது? தற்போது கோடநாடு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யார்? என சட்டப்பேரவையில் முதல்வர் எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமியிடம்  சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கோடநாடு வழக்கில் புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை.வழக்கை நடத்துங்கள். ஜெயலலிதா  மறைவுக்கு பின் அந்த இடத்தை வேறு ஒருவர் வாங்கி விட்டார்.அதனால் அது ஒரு தனியார் சொத்தாகி விட்டது.இதனால் ஜெயலலிதா  மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை என்று முதல்வரின் கேள்விக்கு எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பதிலளித்து பேசினார்.

Find Us Hereஇங்கே தேடவும்