ஓய்வுபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் சட்ட முன் வடிவு விரைவில் தாக்கல்..!

ஓய்வுபெற்ற எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் சட்ட முன் வடிவு விரைவில் தாக்கல்..!

ஓய்வுபெற்ற எம்.எல்.ஏக்கள் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.

 அப்போது பேசிய அவர், ஓய்வு பெற்ற எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கும் சட்ட முன் வடிவு வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மேலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும் என சட்டப் பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்ட நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்