ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் - அமைச்சர் என்.கயல்விழி!

ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தரப்படும் - அமைச்சர் என்.கயல்விழி!

ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாயக் கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என அமைச்சர் திருமதி. என்.கயல்விழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி. என்.கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில்  பேசும் போது, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பேரவையில் புதிய 23 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்

மேலும் வேலூர் ஆதிதிராவிடர் முதுகலை கல்லூரி மாணவியர் விடுதி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதிகளுக்கு புதிய கட்டிடங்கள் 10.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்