மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவை எதிர்த்து போட்டியில்லை!.. – காங்கிரஸ் அறிவிப்பு…

மேற்கு வங்க இடைத்தேர்தல்: மம்தாவை எதிர்த்து போட்டியில்லை!.. – காங்கிரஸ் அறிவிப்பு…

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மம்தாவிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என மேற்கு வங்க காங்கிரஸ் அறிவித்துள்ளது 

வரும் 30ஆம் தேதி மேற்குவங்க மாநிலத்தில், இடைத்தேர்தல் 3 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வருகின்ற இடைத்தேர்தலில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, மம்தாவை எதிர்த்து போட்டியிடப்போவதாக தெரிவித்து வந்த மாநில காங்கிரஸார், அகில இந்திய தலைமையின் ஆணைக்கிணங்க வேட்பாளரை மம்தாவிற்கு எதிராக நிறுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால், அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபடப்போவதில்லை எனவும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கூறியுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்