காரைக்குடியில் அரசு சட்ட கல்லூரி தொடங்கப்படும் - அமைச்சர் எஸ் ரகுபதி

காரைக்குடியில் அரசு சட்ட கல்லூரி தொடங்கப்படும் - அமைச்சர் எஸ் ரகுபதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்ட கல்லூரி தொடங்கப்படும் என அமைச்சர் எஸ் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்ட கல்லூரி தொடங்கப்படும் என்றும் மூன்றாம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு படிப்புகளில் தலா 80 பேருடன் 2022-2021ம் கல்வி ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் புதிய பாட பிரிவில் முதுகலை சட்ட படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.100% சிறைவாசிகளுக்கு தடுப்பூசி போட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான் அதனால்  சிறைக்குள் கொரோனா தொற்று இல்லை என தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் .தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும்.மேலும்  மயிலாடுதுறையில் தற்போது இயங்கிவரும் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆக மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்

காவல் நிலைய சிறை வைப்பு அறைகளில் மனித உரிமை மீறல் இல்லை என்பதை உறுதி செய்ய நன்னடத்தை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் தமிழக அரசு திரும்ப திரும்ப வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்