மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர அரசு கைது செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மகாராஷ்டிர அரசு கைது செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினவிழாவில் "நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் பயப்படவோ அடங்கவோ மாட்டோம் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.