தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசு நிதி திமுக அரசின் நிர்வாக திறமை இன்மையால் கை நழுவுகிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் கேள்வி
தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு வரவேண்டிய மத்திய அரசு நிதி திமுக அரசின் நிர்வாக திறமை இன்மையால் கை நழுவுகிறதா என்று எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தற்போதைய சந்தர்ப்பவாத தி.மு.க. ஆட்சியில் செயலிழந்துபோய் நிற்பது வேதனைக்குரியதாக உள்ளது.அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அலட்சியப் போக்கால் ரூ.2,000 கோடி வரை மத்திட அரசிடம் மானிய நிலுவைத் தொகை தேங்கியுள்ளது.
மத்திய அரசின் மானியத்தைப் பெறுவதற்கான ஆவணங்களைத் தயாரித்து குறித்த காலத்தில் திமுக அரசு அனுப்பவில்லை என்று சொல்லப்படுகிறது.மத்திய அரசின் மானியத்தைப் பெறுவதற்கான ஆவணங்களைத் தயாரித்து குறித்த காலத்தில் திமுக அரசு அனுப்பவில்லை என்று சொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.