வீடியோ வெளியிடப்போவதாக நச்சரித்த மதன் : உண்மையை கட்டவிழக்கும் அண்ணாமலை!

வீடியோ வெளியிடப்போவதாக நச்சரித்த மதன் : உண்மையை கட்டவிழக்கும் அண்ணாமலை!
வீடியோ வெளியிடப்போவதாக நச்சரித்த மதன் : உண்மையை கட்டவிழக்கும் அண்ணாமலை!

திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன் - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை

சமூக ஊடகத்தில் வெளியாகி புகைச்சலை கிளப்பியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு கே டி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்ததாக பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தன்னை சந்தித்த யூ-ட்யூப்பர் மதன் ரவிச்சந்திரன், கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் ஒருவர் பற்றிய வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தன்னிடம் முறையிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது  என்றும்,  அதன் உண்மை தன்மையை ஆராயந்து, குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

ஆகையால், அந்த வீடியோ பதிவுகளை தங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியும், அந்த பதிவுகளை  ஒப்படைக்கமால் மதன் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை நடவடிக்கை எடுக்கக் கோரி  சந்தித்த மதன், வீடியோ ஆதாரங்களை மட்டும் தர மறுத்துவிட்டதாக தெரிவித்தார். எத்தனை முறை கேட்டாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராயாமல் குருட்டுத்தனமாக எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக கூறியுள்ளார்.

கடைசியாக குறுஞ்செய்தி மூலம் தொடர்புக்கு வந்த மதன், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியதாகவும், இல்லையெனில் வீடியோ-வை இணையத்தில் பதிவேற்றிவிடப்போவதாக கூறினார். இருப்பினும் தன்னுடைய நிலைப்பாட்டில் வலுவாமல் உறுதியாக இருந்தமையால் ”செய்து கொள்ளுங்கள்” என்று கூறி முடித்ததாக தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும் அண்ணாமலை அவர்கள், இன்று காலை திரு K.T.ராகவன் அவர்களிடம் பேசியதாகவும், அப்போது ”30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கோடு, கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்தோடு, உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு, இதை  சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று கே டி ராகவன் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சியின் மாண்பையும், செம்மையையும் கருதி, தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகவும் அண்ணாமலையிடம் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

தானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும், திரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்று நம்பிக்கையும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com