கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்பு முறையாக விசாரிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முன்பு முறையாக விசாரிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கோடநாடு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரும் வழக்கில் தீர்ப்பு வரும் ஆக.27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை ,கொள்ளை தொடர்பாக காவல்துறை விசாரணையை விரிவுப்படுத்தியுள்ளது.இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பேசும் போது , கோடநாடு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு காவல்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரிவான விசாரணை நடத்த வேண்டும்,ஆனால்,இதை செய்யாமல் மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு விரிவான விசாரணையை காவல்துறை நடத்துகிறார்கள்.இது சட்டத்திற்கு முரணானது ,என்று தெரிவித்தார்.மேலும் இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி,"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.