மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் நாராயண் ராணே கைது செய்யப்பட்டுள்ளார்.
"நாடு சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனது என்பது கூட தெரியாத மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைய வேண்டும்" என மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுதந்திர தினவிழாவில் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து ராணே அவதூறாக பேசியதாக புகார் அளித்த நிலையில், உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாகக் கூறி நாராயண் ராணேவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு மும்பை, நாசிக், புனே பகுதிகளில் பாஜக அலுவலகங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் நாராயண் ராணேவை ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.