அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்ய லாட்டரி கொண்டுவரும் எண்ணம் இல்லை - தமிழக நிதியமைச்சர்

அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்ய லாட்டரி கொண்டுவரும் எண்ணம் இல்லை - தமிழக நிதியமைச்சர்
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வரும் சிந்தனை திமுக அரசுக்கு இல்லை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதில். 

கடந்த 24.07.2021 அன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து ஏழை, எளிய  மக்களின் சீரழிக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

எதிர்கட்சித் தலைவர் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலும், நிதியமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் லாட்டரி சீட்டை அறிமுகம் செய்து மாநில நிதி ஆதாரத்தை பெருக்கும் சிந்தனை திமுக அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்ய லாட்டரி பற்றி சிந்திக்கவே இல்லை என்று விமர்சித்துள்ளார். கட்டுக்கதைகளை கூறி முதலமைச்சரின் நற்பணிகளுக்கும், சிறப்பான நிர்வாகத்திற்கும் களங்கம் விளைவிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்