பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அழைப்பு: அடுத்தடுத்து டெல்லியை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்?

பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அழைப்பு: அடுத்தடுத்து டெல்லியை நோக்கி பயணிக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்?


பிரதமர் மோடியை   ஓ.பன்னீர்செல்வவம் மற்றும்  எடப்பாடி பழனிசாமி நாளை காலை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு தனது குடும்பத்தினர் மற்றும் ஓபிஎஸின் தீவிர ஆதரவாளருமான ஆளங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி சென்றார். நாடாளுமன்றத்தில் நாளை காலை 11.05 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

இந்த சந்திப்பில்  அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னைகள், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணிகள்,ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது 
 உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டு வந்தது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.கோவையில் இருந்து  
இன்று இரவு டெல்லி புறப்படும் ஈ.பி.எஸ் நாளை காலை பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . நாளை காலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து பிரதமர் மோடியையும், உள்துறை  அமைச்சரவையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்