கடந்த ஆட்சியில் வழங்கிய முகக் கவசங்கள் தரமற்றவை - அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்!

கடந்த ஆட்சியில் வழங்கிய முகக் கவசங்கள் தரமற்றவை - அமைச்சர் சுப்பிரமணியன் ஆவேசம்!


கடந்த அதிமுக ஆட்சியில் பாதுகாப்பான முகக்கவசங்களை வழங்காமல், தரமற்றதை வழங்கியுள்ளதால்  இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கிய இலவச முக கவசங்கள் தரமற்றவை என்றும் பாதுகாப்பான முககவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள் எனவும் குற்றசாட்டியுள்ளார்.

தரமற்ற முகக்கவசம் விநியோகம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தரமான இலவச முகக்கவசம் வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில்  இலவச தடுப்பூசி முகாமை வரும் புதன்கிழமை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக மதுபான பார்கள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் பார் நடத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்