வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து சேர்த்தது அம்பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!


வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக  அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

 அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவருக்கு சொந்தமான 26 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் பொது சுமார் 25 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய ஆவணங்கள், காப்பீடு தொடர்பான ஆவணங்கள், முதலீடு தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்..

மேலும் விஜயபாஸ்கர், அவரின் மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயப்பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2016 மற்றும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த போது சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. அதாவது 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ. 2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில், கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ. 8.62 கோடியாக உயர்ந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களையும் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்