பெரம்பூர் ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது: வைகோவிடம், ரயில்வே அமைச்சர் உறுதி

பெரம்பூர் ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது: வைகோவிடம், ரயில்வே அமைச்சர் உறுதி
“சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையை ஒருபோதும் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ அவர்களுக்கு உறுதியளித்ததாக மதிமுக தலைமை அலுவலகம் செய்திக்குறிப்பு வெளியிட்டளது:

அதில் "மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும், இன்று, டெல்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டிடம் ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வைச் சந்தித்து 'இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயமாக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. 

இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது ரயில்வே அமைச்சரிடம் கூறினேன். ஐசிஎஃப் தொழிற்சாலையை  தனியார்மயமாக்கினால் ஆட்குறைப்பு செய்து விடுவார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, தனியார்மயமாக்கக் கூடாது' என்று கேட்டுக் கொண்டன்.

வேண்டுகோள் ஏற்ற  ரயில்வே அமைச்சர்  எக்காரணத்தைக் கொண்டும் ஐசிஎஃப் தொழிற்சாலையை தனியாரிடம் கொடுக்க மாட்டோம்' என்று உறுதிமொழி அளித்ததாகவும். 'இந்தச் செய்தியை, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம்' என கூறினார்.

இதனையடுத்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்த வைகோ. இன்றைக்கு, ஐசிஎஃப் தனியார் மயமாவதைத் தடுத்த மகிழ்ச்சியை வைகோ வெளிப்படுத்தினார்".

இவ்வாறு மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Find Us Hereஇங்கே தேடவும்