அரசாங்கம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உடனே வழங்க வேண்டும் - கமலஹாசன் வலியுறுத்தல்!

அரசாங்கம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உடனே வழங்க வேண்டும் - கமலஹாசன் வலியுறுத்தல்!

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட இல்லத்தரசிகளின் உரிமை தொகையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'தமிழகத்தில் பெரும்பாலும் குடும்ப தலைவிகள் தங்கள் சொந்த செலவுகளுக்காக கூட மற்றவர்களை சார்ந்திருக்கும் நிலையே உள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாதம்தோறும் உரிமை தொகை தருவது என்ற அறிவிப்பை முதன்முதலில் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து, திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறது.

இதையயடுத்து குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்