ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ரத்து?

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ரத்து?

அதிமுக ஒருங்கிணைப்பாளர்  மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  தலைமையில் அதிமுக அலுவலகத்தில் நடைபெறவிருந்த ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் எழுந்த பல சர்ச்சைகளின் காரணமாக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. அதிமுக பொதுச் செயலாளராக இருந்து சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரை கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஈபிஎஸ் நீக்கினர். தற்போது பொதுச்செயலாளர் இல்லாமலேயே ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்சும் செயல்பட்டு வருகிறார்கள்.

அதன் படி, அதிமுகவில் விரைவில் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அது குறித்து ஆலோசிக்க இன்று காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்