இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில், நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின் போது மத்திய நிறைவேற்ற உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், அதனை நாடாளுமன்றத்தில் முன்மொழிய செய்யவேண்டாமென வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது என்றும் இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் மாநில பட்டியலின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகளை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள்மீது குற்றச்சாட்டு சுமத்துதல்  சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், கட்டணங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால் இது பரவலாக எதிர்ப்புக்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து தரப்பு மக்களுடன் நடத்திய பிறகு மீனவர்கள் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தை காக்கும் வகையிலும் புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்து, தற்போது கொண்டுவரவுள்ள இந்திய கடல்சார் மீனவர் மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சிகளை தொடர வேண்டாம் என்று  கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்