பெருந்தன்மையோடு கட்சியை விட்டு தர வேண்டும்

பெருந்தன்மையோடு கட்சியை விட்டுக்கொடுக்க வேண்டும்: ஜெயக்குமார் கருத்து..!

சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மதுசூதனனை பார்த்து நலம் விசாரிக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரை ஜெயலலிதா பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், "சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது. அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்றது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்புக்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ, அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும். மாறாக தடையாக இருக்கக் கூடாது" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்