ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசுவது சரியல்ல என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசுவது சரியல்ல என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுப்பராயன் போட்டியிடுகிறார். இத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை, அக் கட்சியின் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டுப் பேசினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது சரியல்ல. தேர்தல் முடிவுக்குப் பின்னர், கூட்டணிக் கட்சிகள் கூடி அதை முடிவு செய்ய வேண்டும். கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை ராகுல் தவிர்த்திருக்க வேண்டும். இதன் மூலம் அவர் பாஜகவுக்கு எதிரானவரா, இடதுசாரிகளுக்கு எதிரானவரா என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படும் என்றார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்மொழிந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கு மாற்றாக கருத்து சொல்லியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.