அரசியல்
அடுத்த பிரதமர் சந்திரபாபு நாயுடு! தேவகவுடா விருப்பம்!
அடுத்த பிரதமர் சந்திரபாபு நாயுடு! தேவகவுடா விருப்பம்!
பிரதமராக உள்ள மோடிக்கு கடும் சவாலை கொடுக்க வேண்டுமெனில், சந்திரபாபு நாயுடு பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றார்.
ஆந்திர மாநிலத்தில் சட்டசபைக்கும், மக்களவைக்கும் வரும் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் தெலுங்கு தேசக் கட்சியை ஆதரித்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரம் செய்தார்.
கிருஷ்ணா மாவட்டத்தில் பிரசாரம் செய்த கவுடா, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகக் கூறி, ஆந்திர மக்களை பாஜக அரசு ஏமாற்றியதாக குற்றம் சாட்டியவர், பாஜகவை மக்கள் புறக்கனிக்க வேண்டும் என்றார்.
மேலும், நாடு தற்போது இருக்கும் நிலையில், மாநில கட்சிகள் ஒன்றிணைந்து சந்திரபாபு நாயுடுவை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும், பிரதமராக உள்ள மோடிக்கு கடும் சவாலை கொடுக்க வேண்டுமெனில், சந்திரபாபு நாயுடு பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றார்.