திருச்சியை 2வது தலைநகராக்க முயற்சிகள் மேற்கொள்வேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
திருச்சியை 2வது தலைநகராக்க முயற்சிகள் மேற்கொள்வேன் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், உலக பொருளாதார வீழ்ச்சியால் சிதைந்து சின்னமாபின்னமான தனியார் நிறுவனங்களை மீட்போம். வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுப்போம். தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டார்ட் ஆப் மையம் மற்றும் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்படும்.
எம்.ஜி.ஆரின் கனவுப்படி திருச்சியை 2வது தலைநகராக்க அனைத்து விதத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் ஏற்றுமதி தொழில் நிறுவனங்களை ஏற்படுத்துவோம் என்றார்.