எடப்பாடி பழனிசாமி கையை பிடித்து கெஞ்சினேன் என்று நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கையை பிடித்து கெஞ்சினேன் என்று நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று இரவு 7 மணியளவில் தி.மு.க. கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். அதன் விவரம் வருமாறு:
தி.முக. தலைவர் கருணாநிதியின் மரணத்தில் கூட அ.தி.மு.க.வினர் எங்களை சித்ரவதை செய்தனர். அறிஞர் அண்ணாவுக்கு பக்கத்திலே கருணாநிதிக்கு ஆறடி இடம் தர கேட்டோம். கடைசிவரை மறுத்துவிட்டனர்.
வெட்கத்தைவிட்டு சொல்கிறேன். நான் என்னுடைய அண்ணன் அழகிரி, மைத்துனர் செல்வம், பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒட்டுமொத்தமாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றோம். அப்போது சிலர் தடுத்தனர்.
ஆனால் நான் கவுரம் பார்க்கவில்லை. என்னுடையை மரியாதையை பார்க்கவில்லை. கருணாநிதியின் தன்மானத்தையும், அவருக்கு சேர வேண்டிய புகழையும் மட்டுமே யோசித்தேன்.
எடப்பாடி பழனிசாமியுடன் பலமுறை வாதித்தேன். கையை பிடித்தும் கெஞ்சினேன். ஆனால் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். இறுதியில் நீதிமன்றத்தை நாடியே கருணாநிதிக்கு அண்ணா பக்கம் இடம் பெற்றோம்.
இதற்கு பாடம்புகட்டவே 40 தொகுதிகளிலும் வெற்றியை நீங்கள் தரவேண்டும். இடைத்தேர்தல்களிடும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றிகளை வழங்க வேண்டும் என்றார்.