பிரச்சனை வராமல் இருக்க என் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டுமா? நான் கொடுக்க தயார் என்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரச்சனை வராமல் இருக்க என் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டுமா? நான் கொடுக்க தயார் என்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சியில் அமர்ந்தது.அதிமுக 66 இடங்களை பெற்று தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் பலரும் படுதோல்வி அடைந்திருந்தனர். இதில் குறிப்பாக சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார்.தேர்தல் பரப்புரையின் போது நான் நிச்சயம் ராயபுரம் தொகுதியில் வென்று காட்டுவேன் என்று திமுகவிற்கு சவால் விட்டிருந்தார்.சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு, அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்,பிரச்சினை வராமல் இருக்க பதவியை விட்டு கொடுக்கணுமா,கொடுக்க நான் தயார் அதுதான் இந்த ஜெயக்குமார்... இந்த கட்சி எனக்கு உயிர் போன்றது..கட்சி இல்லையேல் என் உயிர் இல்லை உயிர் போன பிறகு நான் எதற்கு?" என்று தெரிவித்துள்ளார்.மேலும், இந்த ட்விட்டர் பதிவுடன் ஒரு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் பிரபல வார நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டி அளிப்பது இடம்பெற்றுள்ளது.