8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்...
8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 8 வழிச்சாலை அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும்.
சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். அதற்காகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை கொண்டுவந்தார்.
விவசாயத்திற்கு எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யலாம்.
விவசாயத்தை பாதிக்கும் அளவிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு தகுந்த இழப்பீடும் கொடுக்கின்றார்கள்.
எனவே இது தொடர்பாக என்ன செய்யலாம் என அனைத்துக் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்துப்பேசி முதலமைச்சரும், துணை முதல்வரும் முடிவு செய்வார்கள் என்றார்.