மத்திய அரசு என்று தான் அழைப்போம்...பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு என்றுதான் தாங்கள் அழைப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேச்சு என அனைத்திலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வார்த்தை தமிழகத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், ஒன்றிய அரசு என்பதை பயன்படுத்துவது சமூக குற்றம் அல்ல எனவும், அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
இந்த நிலையில் இன்று பாமக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிய அரசு தொடர்பாக கருத்து தெரிவித்தார். எங்களை பொறுத்தவரை மத்திய அரசு என்று தான் அழைப்போம், பெயரை மாற்றுவதால் ஒன்றும் ஆகப்போவது இல்லை என்று அன்புமணி கூறினார். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com