ஓட்டு கேட்க சென்ற தம்பிதுரையை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
ஓட்டு கேட்க சென்ற தம்பிதுரையை கிராம மக்கள் விரட்டியடித்தனர்.
தமிழகத்தில் வருகிற 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. நாட்கள் குறைவாக இருப்பதனால் அனைத்து கட்சியினரும் ஓடிஓடி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அதேபோல் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையும் தீவிரமாக வாக்குசேகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கரூர் தொகுதிக்கு உட்பட்ட குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தக்கோட்டை என்கிற கிராமத்தில் வாக்கு கேட்டு சென்றார்.
அவரை சூழ்ந்துகொண்ட பொதுமக்கள், இங்கு வாக்கு சேகரிக்க வரவேண்டாம். எங்களுக்கு என்ன செய்தீர்கள். குடிநீர் வசதியே இதுவரை எங்களுக்கு செய்து தரவில்லை என்றனர்.
அப்போது கிராம மக்களை சமாதானப்படுத்த தம்பிதுரை முயன்றார். ஆனால் அவரது பேச்சை மக்கள் கேட்பதாக இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.