பிரதமர் மோடிக்கு போட்டியாக வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு போட்டியாக வாரணாசியில் போட்டியிடவில்லை என்று அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவராக இருப்பவர் அய்யாக்கண்ணு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.
அப்போது எலிக்கறி சுவைத்தல், அரை நிர்வாண போராட்டம், கழுத்தில் எலும்புக்கூடு கட்டிக்கொண்டு போராடுதல் என்று பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கு நாட்டின் பல்வேறு மாநில விவசாயிகள் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் மோடி இவரின் கோரிக்கைக்கு சற்றும் செவிசாய்க்கவில்லை. இதற்கு பதில் அய்யாக்கண்ணு உள்பட பலர் பலமுறை கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக அய்யாக்கண்ணுவும் அறிவிப்பு விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவர் நேற்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, அமித்ஷா உடனான பேச்சுவார்த்தை எனக்கு மனநிறைவை தந்துள்ளது. விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். இதனால் வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக நான் போட்டியிடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
எந்தமாதிரி பேச்சுவார்த்தை நடந்ததோ என்னவோ, என்ன கூறினார்களோ... அய்யாக்கண்ணு இப்படி ஒரு முடிவை அறிவித்திருக்கிறார்.