சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசின் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசின் அறிவிப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்றும் அதிரடியாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பின் மூலம் 5 மாவட்ட விவசாயிகளை சென்னை உயர்நீதிமன்றம் காப்பாற்றியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி தலைமையிலான அரசுக்கு இந்த தீர்ப்பு மரண அடியாக இருக்கும் என விமர்சனம் செய்துள்ளார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு போட்ட அன்புமணி ராமதாஸ் கூட, அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு இதுகுறித்து பேசவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேல்முறையீடு செய்ய மாட்டேன் என முதல்வர் வாக்குறுதி அளிக்காவிட்டால், இந்த திட்டத்துக்கு எதிராக வழக்கு போட்ட பா.ம.க அக்கட்சியின் கூட்டணியிலிருந்து உடனே விலகுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.