அடடா மோடியின் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துவிட்டதே.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலை சிறப்பாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ரூ.50 ஆயிரத்துக்க மேல் ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இதுவரை ரூ.1845 கோடி மதிப்புள்ள தங்க நகை, பணம், மதுபானம், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மாநிலம் வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில் ரூ. 513 கோடி என்கிற மதிப்புடன் குஜராத் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. பணம் பறிமுதலில் குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, நாகலாந்து, அருணாச்சலபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் முன்னிலை பெற்றுள்ளன.