தேர்தல் பறக்கும் படை தொகையில் தமிழகம் எந்த இடம் பிடித்திருக்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
தேர்தல் பறக்கும் படை தொகையில் தமிழகம் எந்த இடம் பிடித்திருக்கிறது என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கு வருகிற 17ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இந்த நாளில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 1845 கோடி என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை ரூ.480 கோடி அளவுக்கு நகை, பணம் சிக்கியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளதாம்.