மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை கடுமையாக விமர்சித்தார்.
வரும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ’தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் குடும்ப பிரச்சனையால் அக்கட்சியில் குளறுபடி ஏற்படுவதாகவும், அதனால் சரத்பவாரின் கைகளை விட்டு கட்சி நழுவி செல்வதாகவும் விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சரத்பவார், ‘குடும்பம் குறித்த எந்த அனுபவமும் இல்லாத ஒருவர், தன்னுடைய குடும்பம் தற்போது எங்கே உள்ளது என்ற எண்ணம் கூட இல்லாத ஒருவர், மற்றவர்களின் குடும்பம் பற்றி விமர்சனம் செய்வது மிகவும் தவறு’ என கூறியுள்ளார்.