அரசியல்
பாஜகவுடன் கூட்டணி! ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்!
பாஜகவுடன் கூட்டணி! ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் சவால்!
பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லமுடியுமா என்று சவால் விட்டார்.
நாகர்கோவிலில் அமமுக வேட்பாளரை ஆதரித்து, அக் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது, தான் தனது வாழ்நாளில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி வருவதாகவும், இதேபோல் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லமுடியுமா என்று சவால் விட்டார்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு ஒருவேளை பாஜக ஆட்சி அமைக்க எம்பிக்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், பாஜக கூட்டணிக்கு தாவி, ஆதரவு கொடுப்பதுடன், அமைச்சரவையிலும் பங்கேற்பார்கள். இப்படி ஏற்கனவே நடந்துள்ளது என்றும் தினகரன் தெரிவித்தார்.