சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தவுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்
சென்னை மற்றும் சிவகங்கையில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். மேலும் சோதனை நடத்த வீட்டிற்கு வரும் அதிகாரிகளை வரவேற்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், ‘வீட்டில் இருந்த எல்லாவற்றையும் வேறு இடத்திற்கு மாற்றி துடைத்து வைத்து விட்டு, வருமான வரித்துறையை ப.சிதம்பரம் அழைப்பதாக விமர்சனம் செய்தார்.
மேலும் யார் எங்கு பணம் வைத்திருக்கிறார்கள் என்பது வருமான வரித்துறைக்கு நன்றாகவே தெரியும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.