சசிகலாவுடன் பேசிய 15 நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வைத்த ஆப்பு!

சசிகலாவுடன் பேசிய 15 நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை வைத்த ஆப்பு!

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 அதிமுக நிர்வாகிகள்  கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு,  ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

அதில், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வி.கே.சின்னசாமி, வாசு, சோமாத்தூர் சுப்பிரமணியம், வின்சென்ட் ராஜா, பருத்தியூர் நடராஜன், அருள்ஜோதி, சுஜாதா ஹர்ஷினி, அம்மா எஸ்.சிவா, பில்மூர் ராபர்ட், ஸ்ரீதேவி பாண்டியன், ராஜேஷ் சிங், ஒட்டக்காரர் என்.ராஜூ, சதீஷ், ராமச்சந்திரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் இவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளராக இருந்த ஏ.கே.எம்.அழகர்சாமியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்