அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்யும் சசிகலா திட்டம் நிறைவேறாது: ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கூட்டறிக்கை.

அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்யும் சசிகலா திட்டம் நிறைவேறாது: ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கூட்டறிக்கை.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், "சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த திருமதி சசிகலா இப்போது கழகம் இவ்வளவு வளமும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்று இருப்பதை பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப் போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும் அதை ஊரறிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மகத்தான தியாகத்தாலும், புகழ்பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலை பெறுமே தவிர ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்கு தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்பதை நினைவு படுத்துகிறோம். திருமதி சசிகலா உடன் தொலைபேசியில் உரையாடி கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும்: இழுக்கும்,பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்