நீங்க 'ஒன்றிய அரசு'ன்னு சொன்னா நாங்க 'பாரத பேரரசு' ன்னு சொல்லுவோம் - குஷ்பு ஆவேசம்

நீங்க 'ஒன்றிய அரசு'ன்னு சொன்னா நாங்க 'பாரத பேரரசு' ன்னு சொல்லுவோம் - குஷ்பு ஆவேசம்

திமுக ஆட்சி அமைந்தது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 திமுகவினர் பேசும் போது ஒன்றிய அரசே என்றே குறிப்பிடுகின்றனர்.. இதனால் மத்திய அரசா அல்லது ஒன்றிய அரசா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் குஷ்பு தனது ட்விட்டரில், இந்தியாவின் ஒரு பகுதியாக தான் தமிழ்நாடு இருந்தது.. இருக்கிறது.. இனிமேலும் இருக்கும்.. வாழ்க பாரதம்.. வாழ்க தமிழகம்..' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்வீட்டில் " பல ஆண்டுகளாக எதிரக்கட்சியாக இருந்த போதிலும், எப்போதும் போலவே 'மத்திய அரசு' என்று அழைப்பதில் பெருமை கொள்கிறோம். நமது தமிழ்நாடு மாநிலத்தில், அருவருப்பு அரசியல் நடக்கிறது.. அவர்களுக்கு எளிதில் புரியும்படி ' பாரத பேரரசு' என்று அழைக்கிறோம்.. என்று குறிப்பிட்டுள்ளார்..

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்