மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்: வியந்து பார்த்த கூட்டம்

மருத்துவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்: வியந்து பார்த்த கூட்டம்
சித்த மருத்துவ வார் ரூம் திறப்பு விழாவிற்கு சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அங்கிருந்த அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நாம் அன்றாட வாழ்க்கையில் நம்முடைய மனச் சோர்வை போக்கி கொள்ளவும்,உடலை உறுதியாக வைத்துக் கொள்ளவும்,யோகா உடற்பயிற்சி நடைபயிற்சி ஆகியவைகளை செய்து வருகிறோம். தற்போது திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் இதுபோன்ற உடல் நலம் சார்ந்த யோகா,உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதில் வல்லவர் என்பது அவரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள "சித்த மருத்துவ வார் ரூம்" என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறப்பு விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

அப்போது, அங்கு யோகா செய்யும் பயிற்சி வழங்கப்பட்டு வருவதை கண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் , திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தாமாக முன்வந்து யோகா செய்ய தொடங்கினார். அப்போது அங்கு சுற்றியிருந்த அதிகாரிகள் அனைவரும் அவரை வியப்புடன் பார்த்தனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,

" மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் "சித்த மருத்துவ வார் ரூம்"என்கிற ஒருங்கிணைந்த கட்டளை மையம் திறப்பு மற்றும் துறை ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக யோகா பயிற்சியில் நாமும் கலந்துகொண்டோம் " என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நல்ல உடல் நலம் சார்ந்த விஷயங்களில் அமைச்சர்கள் மக்களுக்கு  முன்னோடியாகவும் ,வழிகாட்டியாகவும் இருப்பது சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்