போஸ்டரில் யுத்தம் செய்யும் அதிமுகவினர்!

போஸ்டரில் யுத்தம் செய்யும் அதிமுகவினர்!
நெல்லையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் படங்களுடன் இந்த சுவரொட்டிகளில் இடம் பெற்றிருந்தன.

தேர்தல் நடைபெறுவதற்கு முன் பிருந்தே யார் தலைவர் என்பது குறித்து பல பிரச்சினைகள் அதிமுகவில் வந்த வண்ணம் இருந்தது. அதற்குப் பிறகு அதிமுக தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது. மேலும் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.

கடந்த சில நாட்களாக அதிமுகவினர் போஸ்டரில் சுத்தம் செய்து வருகின்றனர்.அதில், அதிமுக கட்சி செயல்பாடுகளில் மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர் களிடம் கலந்து ஆலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே.

அவ்வாறு செய்ததால் தான் தேர்தலில் தோற்றுப்போனோம் . இனிமேலும் தொடர்ந்தால் தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம் ' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது .

இப்படி பெயர் அறிவிக்காமல் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது திமுக , அமமுகவின் சதி வேலையாக இருக்கலாம் என்று நெல்லை அதிமுகவினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்