முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம்.. இதைப் பற்றித்தான்?

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம்.. இதைப் பற்றித்தான்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்குள் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களும் பணிகளை செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்