குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் !

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் !
.குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை துணை குடியரசுத் தலைவர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 2 ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகின்றார். ஒன்று அவரது சொந்த அக்கௌன்ட் , மற்றொன்று அலுவலக ரீதியில் பயன்பாட்டில் உள்ள அக்கௌன்ட். இதில் அவரது பெயரில் அவருக்கென உள்ள தனிப்பட்ட அக்கௌண்டில் ( @MVenkaiahNaidu ) 1.3 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்.

 டுவிட்டர், நிறைய அரசியல் பிரமுகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் வெரிபைடு புளூ டிக் காணப்படுகிறது.

 வெங்கையா நாடு ட்விட்டர் அக்கவுண்ட் தொடர்ச்சியாக பயன்படுத்தவில்லை என்ற காரணத்தால் இந்த நடவடிக்கையை ட்விட்டர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் அக்கவுண்ட் கடந்த ஆறு மாதங்களாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக ட்விட்டர் வெரிபைடு புளூ டிக் நீக்கப்பட்டதாக துணை ஜனாதிபதியின் அதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்