வாவ்... கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூ.50 லட்சம் பரிசு !

வாவ்... கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூ.50 லட்சம் பரிசு !

கிராமப்புற பகுதிகளை "கொரோனா இல்லாத கிராமமாக" மாற்றினால், முதல் பரிசாக 'ரூ.50 லட்சம் பரிசுத் தொகை' வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வேகமாக பரவி வருகிறது.இதனால்,கிராமப்புற பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கிராமப்புற பகுதிகளை, "கொரோனா இல்லாத கிராமமாக" மாற்றினால், 'ரூ.50 லட்சம் பரிசுத் தொகை' வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.அதாவது, கொரோனா ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் இந்த போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாளும் கிராமத்திற்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம், 2 வது பரிசாக ரூ.25 லட்சம், 3 வது பரிசாக ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராமங்களில் இந்த போட்டி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் எந்த கிராமம் சிறப்பாக செயல்பட்டது என்ற முடிவை தேர்வு செய்ய ஒரு கமிட்டி உருவாக்கப்படும் என  தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்