மிஸ் யூ அப்பா’: கருணாநிதி பிறந்த நாளில் குஷ்பு ட்வீட்

மிஸ் யூ அப்பா’: கருணாநிதி பிறந்த நாளில் குஷ்பு ட்வீட்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் உள்பட பலரும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் கருணாநிதி சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பல அரசியல் பிரபலங்கள், திரை உலக பிரபலங்கள் ட்வீட்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் தற்போதைய பாஜக பிரபலமுமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாநிதி குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், நான் ஒருநாள் கூட கருணாநிதியை உணராத நாளில்லை. எனக்கு ஒரு குருவாக கடவுளுக்கு மேல் அவர் இருந்தார் என்றும், அவர் என்னுடைய மிகச் சிறந்த ஆசிரியராகவும் இருந்தார் என்றும், உங்கள் ஆசிர்வாதம் எப்போதும் என் மீது பொழியும் என்று நான் நம்புகிறேன் என்றும், மிஸ் யூ அப்பா என்றும் பதிவு செய்துள்ளார். 

நடிகை குஷ்புவின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்