நான் மீண்டும் வருவேன்: சசிகலா ரிட்டர்ன்ஸ்: அலறும் அதிமுக

நான் மீண்டும் வருவேன்: சசிகலா ரிட்டர்ன்ஸ்: அலறும் அதிமுக

கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என்று கட்சி தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு முதல் 4 வருடங்கள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தண்டனை காலம் முடிந்து விடுதலையானார்.அரசியலில் ஈடுபடுவாரா சசிகலா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சில நாட்கள் அமைதியாக இருந்த சசிகலா திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார்.அதன் பிறகு அனைத்தும் சுமுகமாக சென்று கொண்டிருந்தது. 

இந்த சூழலில் அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தொண்டரிடம் சசிகலா, நல்லா இருக்கீங்களா என்று கேட்பதாக உள்ளது. அதற்கு அவர் நலலாஇருக்கிறேன் அம்மா. உங்கள் குரலை கேட்டதே பெரிய சந்தோஷம் அம்மா என்கிறார். அதற்கு சசிகலா, "ஒன்றும் கவலைப்படாதீங்க கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம்.. கொரோனா முடிந்த பின் நிச்சயம் நான் வருவேன், எல்லாரும் கவனமாக இருங்க" என்பதாக உள்ளது.ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக மற்றொரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் சசிகலா தான் இதை பேசினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.ஆனால் சசிகலா மீ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் எது மாதிரியான மாற்றம் நிகழும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    63.51%
  • ஓ. பன்னீர்செல்வம்
    36.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்